×
அந்துப்பூச்சி கவனிப்பு - 2022

அந்துப்பூச்சி அல்லது விட்டில் பூச்சி (moth) என்பது பட்டாம்பூச்சிவகையைச் சேர்ந்த பூச்சி ஆகும். பட்டாம்பூச்சிகளோடு நெருங்கிய உறவு கொண்ட, பார்ப்பதற்கு பட்டாம்பூச்சியை ஒத்திருக்கும் பல வண்ணப்பூச்சிகளுக்கு அந்துப்பூச்சி என்று பெயர். இரவில் நடமாடும் இவை ஒளியின் வெளிச்சத்தால் ஈர்க்கப்படுகிற விட்டில் பூச்சிகள். பட்டுப்பூச்சி ஒரு அந்துப்பூச்சியே!

ஏறத்தாழ 1,60,000 விட்டில்பூச்சி சிற்றினங்கள் இருப்பினும், பெரும்பாலான உள்ளினங்கள் இன்னும் வகைப்படுத்தப்படவில்லை.பெரும்பாலான அந்துப்பூச்சி சிற்றினங்கள் இராவுலாவிகள். ஆனால், இவற்றில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான சிற்றினங்கள் பகலுலாவிகளாகவும், மாலையுலாவிகள் ஆகவும் இருக்கின்றன.


தேனீக்கள் பகலில் மகரந்தச் சேர்க்கை செய்வதை போல, அந்துப்பூச்சிகள் இரவில் மகரந்தச் சேர்க்கை செய்கின்றன. இவை வௌவ்வால்களின் பிரதான உணவாக இருக்கிறது. பெரும்பாலும் விவசாய பயிர்களில் தாக்கக்கூடியது அந்துப்பூச்சியின் புழுக்களே. சமீபத்தில் சோளத்தை தாக்கிய அமெரிக்க படைப்புழுவும் அந்துப்பூச்சியாக தான் மாறும்.


ஈகை குழு குரல்குட்டை கிராமத்தில் கிட்டத்தட்ட 100 வகையான அந்துப்பூச்சிகளை ஆவணப்படுத்தியுள்ளது. அவை எந்த காலத்தில், எந்த பயிர்களை தாக்குகின்றன, அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை மக்களுடன் சேர்ந்து செயல் பட ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த கிராம இளைஞர்களின் முயற்சியே அந்துப்பூச்சி கவனிப்பு.ஈகை குழு கடந்த மூன்று ஆண்டுகளாக அந்துப்பூச்சி கவனிப்பு செய்து வருகிறது. இதற்கு உறுதுணையாக இருந்த தன்னார்வலர்கள், கிராம மக்கள் மற்றும் அந்துப்பூச்சி குறித்த காணொளியை உலக அந்துப்பூச்சி வாரம் அமைப்பின் இணையதள பக்கத்தில் வெளியிட உதவிய ப்ரிதா தேய் அவர்களுக்கு நன்றி. மேலும் அந்துப்பூச்சி திரை அமைக்க அறிவுரைகள் கூறிய அந்துப்பூச்சி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் அகீட காவாஹாரா (Kawahara Lab, Florida Museum of Natural History, University of Florida ) அவர்களுக்கும் நன்றி.


grid-smartselect-20220617-144358-facebook1655541453.jpg

grid-smartselect-20220617-144409-facebook1655541455.jpg

grid-screenshot-20220617-144614-youtube1655541453.jpg